tamilnadu

img

பெத்தனாட்சிவயல் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் தஞ்சை ஆட்சியர் உறுதி

தஞ்சாவூர், டிச.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெத்தனாட்சிவயல் கிரா மத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் பார்வையிட்டு அக்கிரா மத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.  பெத்தனாச்சிவயலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்  150 குடும் பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 250 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நூற்றாண்டிலும் இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி, கேள்விக் குறியாக உள்ளது. இங்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான குடி தண்ணீர், வீடு, மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்கை நடத்தும் மக்கள் கீற்று வீட்டில் வசித்து வருகின்றனர். குடி யிருக்கும் இடத்திற்கு மனைப்பட்டா கிடையாது. இந்த நிலங்கள் அனை த்தும் மேய்சல் தரிசு என கூறப்படு கிறது.  இதனால் சுமார் 50 முதல் 100 ஆண்டு கள் வரை குடியிருந்து வரும் இவர் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு மறுத்து வருகிறது. சொந்த பட்டா இல்லாததால் மின்வினியோகம் பெற முடியவில்லை. அதே போல் அரசு கட்டிக்கொடுக்கும் தொகுப்பு வீடு மற்றும் பிரதம மந்திரி வீடுகள் பெற முடியவில்லை. குடிநீரை பொறுத்த வரை இங்குள்ள மினிடேங் இயங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது அருகில் உள்ள காட்டாற்றில் ஊற்று தோண்டி அதிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.  இங்கு வசித்து வரும் மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு அனைத் தும் இருந்தும், அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்கள் ஒருசிலர் மீன்பிடி தொழி லும், மற்றவர்கள் விவசாய கூலி வேலையும் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கிராமத்தில் சுமார் 100 குழந்தைகள் இருக்கும் நிலை யில், இதில் ஒற்றைப்படை எண்ணிக் கையில் குழந்தைகள்  கல்வி பயில் கின்றனர். மற்ற குழந்தைகள் அனை வரும் ஆடு, மாடு மேய்க்கின்றனர். சில குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனர். இதே போல் எங்களுடைய காலம் கடந்து வருகிறது என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து அறிந்த, ஆட்சியர் ம.கோவிந்தராவ் பெத்தனாட்சிவயல் கிராமத்தில் நேரில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் இந்த கிராமத்தின் அடிப்படை தேவைகள் அனைத்தும் இரண்டுமாத காலத்தில் செய்து கொடுக்கப்படும்” என உறுதி யளித்தார். பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.