தஞ்சாவூர், அக்.2- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, பேரூ ராட்சிகள் உதவி இயக்குநர் ப.குற்றாலிங்கம் ஆகியோ ரின் உத்தரவின் பேரில், பேராவூரணி பேரூராட்சியின் 18 வார்டுகள், கடைவீதி, பொது இடங்கள், மருத்துவமனை, மத வழிபாட்டு தலங்கள், தனியார் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வேம்பு, புங்கை, கொய்யா, மகாகனி, தேக்கு, பலா, மாதுளை, செம்மரம் உள்ளிட்ட 3 ஆயிரம் மரக்கன்று கள் புதன்கிழமை நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணி மொழியன் தலைமை வகித்தார். தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன், துப்பு ரவு மேற்பார்வையாளர் வீரமணி, சிவசுப்பிரமணியன், இள நிலை உதவியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், துப்பு ரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மற்றும் குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.