செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

மியாமி ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி

மியாமி ஓபன் கிராண்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தன்னை எதிர்த்து ஆடிய அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார்.


அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தற்போது சர்வதேச தர வரிசையில் 5ம் இடத்தில் உள்ள உலகின் மிக மூத்த வீரரான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர் மற்றும் கடந்தமுறை இப்பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டிகளின் அனைத்து முறைகளிலும் வெல்லும் 101வது பட்டமாகும்.


;