வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஹாலேப் கலக்கல்

பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.   ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் தரவரிசையில் இல்லாத பொலிவியாவின் ஹுகோ டெல்லியனை 6-2, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல வாவ்ரிங்கா (சுவிஸ்), தியம் (ஆஸ்திரியா), காட்சநோவ் (ரஷ்யா), மரின் சிலிச் (குரோஷியா), வெர்டாஸ்கோ (ஸ்பெயின்) ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். இந்திய நட்சத்திரம் குணேஸ்வரன் ஜப்பான் வீரர் இடோவிடம் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.  மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் அதிரடிக்கு பெயர் பெற்ற ருமேனியாவின் ஹாலேப் அமெரிக்காவின் பிராடியை 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது  சுற்றுக்கு முன்னேறினார். சுவிட்டோலினா (உக்ரைன்), கீஸ் (அமெரிக்கா), பென்கிக் (சுவிஸ்), பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.    

;