tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பம் வரவேற்பு

சேலம், நவ. 17- சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 2020-2021 ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிக ளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப் படவுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 2020- 2021 ஆம் நிதியாண்டில் புதிய திட்டமாக, நடுக்கு வாதம் உடையவர்கள், திசு பன்முக கடினமாதல், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1500 மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர் கள் அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, நடுக்கு வாதம் உடையவர்கள், திசு பன்முக கடினமாதல், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை யுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைபடம், வங்கி தேசிய சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக் கலாம்.

 மேலும், வருவாய்துறை மூலம் உதவித்தொகை பெற வில்லை என கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 11 மாவடட ஆட்சியர் அலுவலகம், சேலம் என்ற முகவரி யில் நேரடியாகவும், 0427 2415242 என்ற தொலைபேசி மூல மாகவும் நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.