திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

இளம்பிள்ளையில் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

இளம்பிள்ளை, ஜன. 14- சாலையை சீர் செய்ய கோரி இளம் பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தை  பொது மக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்  சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூ ராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு திரு மலை கவுண்டர் தெரு புத்திரன் காடு  பகு தியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற் பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தில் சாலையை சீர் செய்ய வேண்டும் என திங்க ளன்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் கான் கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையை சீரமைக்க கடந்த 2 மாதத் திற்கு முன்பு கற்கள் கொட்டி பணி தொடங்கி யதில் இருந்து இன்று வரை எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை.  இதனால், அப்பகுதியில் புகை எழும் பியபடி சாலையில் வாகனம் சென்று வரு கிறது. அந்த சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள னர். மனுவை பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் கூறுகையில்,  அப்பகுதியில் ஒரு தரப்பினர் சாலை அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர், இன்னொரு தரப்பினர் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். புத்திரன் காடு பகுதியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியில் இதுவரை நிலங்களை இறங்கியதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும்  இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு பின்னர் சாலையை சீர் செய் யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;