ஆம்பூர், மார்ச் 8 - பேரணாம்பட்டை அடுத்த பத்தலபல்லியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியும் தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து சர்வதேச மகளிர் தினவிழா நடத்தியது. மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவின் பேரில் இந்த விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையா சிரியர் போன்.வள்ளுவன் தலைமை தாங்கினார். பேர்ணாம்பட்டு ஒன்றிய மருத்துவ அலுவலர் கலைச் செல்வி, எம்ஜிஆர் நகர் அரசு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் எம்ஜிஆர் நகர் குறுவள மைய ஒருங்கிணைப்பா ளர் ஜெயந்தி மற்றும் டி.டி.மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலுவலர் சிவக்குமார், பி.இ.சி. தனிப் பயிற்சி கல்வி நிலையத்தின் முதல்வர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப் பாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன சிறப்பு ஆசிரியர் ராகு நன்றி கூறி னார்.