tamilnadu

தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

மக்களவைத் தேர்தலில் தமிழ கத்தில் 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தன்வசப்படுத்தி இருக்கிறது. புதுச்சேரி யில் 1 தொகுதியோடு சேர்த்து, நாற்பதும் நமதே என்ற திமுக கூட்டணியின் முழக்கம் நனவாகி உள்ளது.

இந்தியா கூட்டணி : 46.9%

திமுக இந்த முறை 22 தொகுதிகளில் போட்டியிட்டு, 25.89 சதவிகித வாக்கு களைப் பெற்றுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1.04 சதவீத வாக்கு களைப் பெற்றது. கொமதேக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து அதன் வாக்குகளையும் சேர்த்து திமுக  மொத்தம் 26.93 விழுக்காட்டை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 10.67 சதவீத வாக்கு களைத் தன்வசப்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.52 விழுக்காடு  வாக்குகளையும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி 2.15 விழுக்காடு வாக்குகளை யும் பெற்றுள்ளன. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2.17 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 46.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி : 23.05 % 

வாக்கு சதவீதத்தில் அதிமுக ஒட்டு மொத்த அளவில் இரண்டாவது இடத்தைப்  பெற்றுள்ளது. 23.05 விழுக்காடு வாக்கு களை அதிமுக பெற்றுள்ளது. அதிமுக  தனியாக 19.40 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சி, அதி முகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 0.56 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அதேபோல எஸ்டிபிஐ கட்சியும் அதிமுக சின்னத்தி லேயே போட்டியிட்டு, 0.5 சதவீத வாக்கு களைப் பெற்றுள்ளது. இதனால் அதிமுக 20.46 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக 2.59 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 23.05  விழுக்காடு வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. 

பாஜக கூட்டணி எவ்வளவு?

பாஜக 9.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சி யின் பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 0.36  விழுக்காடு வாக்கு களைப் பெற்றுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் ஏ.சி.சண்முகம், தாமரை சின்னத்தில் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேபோல தாமரை சின்னத் தில் நின்று, இமகமுக 0.47 விழுக்காடு  வாக்கு களையும் தமமுக 0.5 விழுக்காடு வாக்கு களையும் பெற்றுள்ளன. ஆக மொத்தத்தில் பாஜக, 11.24 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாமக தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்  ளது. தமாகா 0.87 விழுக்காடு வாக்குகளையும் அமமுக 0.9 % வாக்கு களையும் பெற்றுள்ளன. ஓபிஎஸ் தனித்து நின்று 0.79 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 18.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.    

நாதக நிலை என்ன?

தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதிலும் 8.1  விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல ‘நோட்டா’ 1.06 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.

 

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
       கட்சி                        வாக்கு சதவீதம்       
திமுக    25.89%
கொமதேக                1.04% 
(திமுக சின்னம்)       
காங்கிரஸ்    10.67%       
சிபிஎம்    2.52%       
சிபிஐ    2.15%       
விசிக    2.17%       
மதிமுக    1.32%       
ஐயூஎம்எல்    1.17%       
மொத்தம் (திமுக கூட்டணி)     46.9%       

அதிமுக    19.40%
புதிய தமிழகம்    0.56%     (அதிமுக சின்னம்)       
எஸ்டிபிஐ    0.50%    (அதிமுக சின்னம்)       
தேமுதிக     2.59%
மொத்தம் (அதிமுக கூட்டணி)    23.05%       

பாஜக     11.24%       
பாமக    4.1%       
தமாகா    0.87%       
அமமுக    0.9%       
ஓபிஎஸ்    0.79%       
மொத்தம்(பாஜக கூட்டணி)    18.2%        

நாம் தமிழர் கட்சி                     8.1%    



 

;