tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விநாயகர் ஊர்வலத்தில் விதி மீறல்
இந்து முன்னணியினர்
61 பேர் மீது வழக்கு!

சென்னை, செப். 16- சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பிரத்யேக 17 வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு சென்று கரைக்க வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த விதிமுறைகளை மீறி மசூதிக்கு அருகே மேளதாளம் முழங்க, விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிந்தும் இந்து முன்னணி அமைப்பினர் வேண்டுமென்றே சென்றதுடன், இஸ்லாமியர்களுடன் தக ராறில் ஈடுபட்டனர். அதனடிப்படையில், பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்

சென்னை, செப். 16 - தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரு கிறது. கோடைக்காலம் போல் வெயில் சுட்டெரிப்பதால், மக்கள் நட மாட முடியவில்லை. வாகன ஓட்டி கள் கடும் சிரமங்களை சந்திக்கின்ற னர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிக மாக இருக்கக் கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது  ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் கூறப் பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வ தற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, மேற்குவங்க கடலோர பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.