சென்னை, செப். 28 – வில்லிவாக்கம் மேயர் சிட்டிபாபு பாலத்தின் கீழிருந்து துவங்கும் சாலையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும். சாலையில் இரு புறமும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைத்து புதிய மின்விளக்கு பொருத்த வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.27) வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) ஷெல் பகுதி குழு, ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கம், சிஐடியு வில்லிவாக்கம் பகுதி குழுவும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தின. இதில் சிஐடியு மத்திய சென்னை மாவட்ட இணைச் செயலாளர் பா.ராஜாராமன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் கே.டி.ஜோஷி, ஷெல் பகுதி தலைவர் டி.வெங்கடேஷ், செயலாளர் ஜெ.கதிரவன், ஆட்டோ சங்க வில்லிவாக்கம் பகுதி தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் என்.சி.ஆப்ரஹாம் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.