tamilnadu

img

அத்திவரதர் விழாவுக்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள்

காஞ்சிபுரம், ஜூலை 3-  காஞ்சிபுரத்தில் அத்திவர தர் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவ தால், காஞ்சிபுரம் முழுவதும் போக்குவரத்து மாற்றியமை க்கப்பட்டு ள்ளது.  நகரத்திற்குள் பேருந்து ஏதும் வரக்கூடாது என்பதால் நகர எல்லைக்கு வெளியே 3 தற்காலிக நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து மினி பேருந்து மற்றும் ஆட்டோக்களில் காஞ்சிபுரம் நகரத்திற்குள் வரலாம் என்றும் அனுமதி அளித்து ள்ளது. அதுமட்டுமின்றி, காஞ்சிபுரம் நகர மக்கள் தமது வாகனத்திற்கு ஒப்பு தல் சீட்டு பெற்றிருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். அப்படி ஒப்புதல் பெறாமல் இருந்தால் வாகனத்தை இயக்க முடியாது என்று அறிவித்து இருந்தனர்.  இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை யில் வசிக்கும் குமார் (46)  டாடா மேஜிக் வாகனத்தை முத்தியால்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இயக்கினார். அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதற்கு அவர், ஏன் எதற்கு என்று கேட்டபோது, டாடா மேஜிக் வாகனத்திற்கு அனுமதி கிடையாது என காவல்துறையினர் கூறியுள்ளனர். இப்படி செய்தால் நாங்கள் எப்படி பிழைப்பது என்று காவலரிடம் குமார் கேட்டுள்ளார்.  இதற்கு, “இதுதான் சட்டம் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்” என்று காவல்துறையினர் கூறியதாகக் கூறப்படுகிறது.  இதனால் கோபமடைந்த குமார், பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.  யாரும் அவரைக் காப்பாற்ற முன் வராத நிலையில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். அவருக்கு மலர் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். அதேபோல், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி. மனைவி நாகேஸ்வரி. இவர்களின் மகன்கள் மவுரி நாராயண ரெட்டி, சக்தி ஆகாஷ் (கல்லூரியில் 3 ஆம் ஆண்டு  படித்துவந்தார்). இவர்கள் குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவ நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.  இந்நிலையில், புதனன்று (ஜூலை 3)  இவர்கள் தேவராஜ சுவாமிகள் சன்னதியில் தரிசனம் செய்துள்ளனர். அப்போது,  சுவற்றில் இருந்த பல்லியை சக்தி ஆகாஷ் படம் எடுத்துள்ளார். அங்கிருந்த பெண் காவலர் அவரை தடுக்கும் விதமாக தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவர்  கீழே விழுந்துள்ளார்.  உடனே அவரை மருத்துவ முகாமில் பரிசோதித்து, பிறகு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர். கோவிலில் காவலர் தாக்கி கீழே விழுந்த போதே அந்த வாலிபர் இறந்துவிட்ட தாகவும், இதை மறைக்கவே  மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது போல் காவல்துறையினர் நாடக மாடியதாகக் கூறப்படுகிறது.   காவல்துறையினரின் கெடுபிடியால் ஒரே நாளில் டாடா மேஜிக் ஓட்டுனர், கல்லூரி மாணவர் சக்தி ஆகாஷ் ஆகிய இருவரும் இறந்துள்ளனர் என பொது மக்கள் குற்றம் சாட்டு கிறார்கள்.