tamilnadu

img

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தலாமா அம்பேத்கர் சட்டப் பல்கலை. நிர்வாகம்

தனது பொன்மொழியாக, “சட்டம் மேலானது” என்று சொல்லிக்கொண்டு, சட்டத்தை தன் கையில் எடுத்து மாணவர்களை அச்சுறுத்துகிறது சீர்மிகு சட்டப் பள்ளி நிர்வாகம்.

05.07.24 அன்று நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், மாணவர்கள் தங்களுக்குள்ளேயே தாக்குதல் நடத்திக் கொள்வதாகவும், வெளியே இருந்து வருபவர்களை தாக்குவதாகவும் கூறி, மொத்த வளாகத்தையுமே அதன் ஜனநாயக இயல்பை இழக்கச் செய்துள்ளது.

04.07.24 அன்று கல்லூரியை சாரா ஏபிவிபி(ABVP)யை சார்ந்த இருவர் பல்கலைக்கழகத்தின் கேலரிக்குள் நுழைந்து ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வ தாகவும், தங்குமிடம் தருவதாகவும் உறுதியளித்து சில மாணவர்களை கூட்டி மதவெறுப்பு கருத்துக்களையும் சாதியவாத பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளனர். 

மதவாத, சாதியவாத பிரச்சாரம் செய்தவர்களை காப்பாற்ற...

அங்கிருந்த சில மாணவர்கள் இக்கருத்துக்களைக் கேட்டு  ஆவேச மடைந்து, அவர்களைப் பற்றி விசா ரிக்கும் பொழுது பல்கலைக்கழக மாண வர்கள் சிலருக்கும், அவ்விருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இவ்விரு ஏபிவிபி ஊழியர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் இச்சுற்றறிக்கையை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வெளியே இருந்து வந்து மதவாத, சாதியவாத பிரச்சாரம் செய்த  இருவரின் புகைப்படங்கள், அவர்களி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அறிக்கை மற்றும் வேலைத் திட்டம் கொண்ட குறிப்பேட்டை நிர்வாகத்திடம் சமர்ப்பித்த பிறகும், இந்நிகழ்வினை மாணவர்களுக்கிடையிலான மோதல் என்று சித்தரிக்கும் நிர்வாகத்தின் நோக்கம், வெட்ட வெளிச்சமாக இரு வரையும் பாதுகாத்து, பிரச்சனையை திசை திருப்புவது என்பதே ஆகும்.  

இன்றளவில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களை காவிக் கூடாரங்களாக மாற்ற முயற்சி நடப்பதை இந்த நிகழ்வு அம்பலப் படுத்தி காட்டுகிறது. 

மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பல்கலை. நிர்வாகம்

இதைத்தொடர்ந்து இதே நாளில் (05.07.24) வெளிவந்த சுற்றறிக்கை ஒன்றில், சில அமைப்புகளை சார்ந்த  மாணவர்களும், அரசியல் பேசும் சில ரும், மாணவர்களை பிளவுபடுத்துவ தாய்க் கூறி, அவர்களை நிர்வாகம் கண்காணிப்பதாகவும் அவர் களை நிரந்தரமாக பல்கலைக்கழ கத்திலிருந்து நீக்குவதாகவும் சொல்லி முற்போக்கு அரசியல் பேசும் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளது. 

இப்படி, வளாகத்தினுள் அரசியல் பேசும் மாணவர்களையும், பலதரப்பட்ட மாணவர் அமைப்பு களை சார்ந்தவர்களையும், அச்சுறுத்து வதென்பது அரசமைப்புச் சட்டத்தால்  அடிப்படை உரிமைகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட பிரிவு 19(1)(a) மற்றும் 19(1)(c)-க்கு எதிரானதாகும்.

மேலும், மதப் பிரிவினை பேசுபவர்களையும், பிற முற்போக்கு கருத்துகளை பேசுபவர்களையும், அமைப்புகளை சார்ந்தவர்களையும் ஒப்பிடுவது அபத்தமானதாகும். இவர்களை ஒரே தராசில் வைத்து பேசுவது பல்கலைக்கழக நிர்வா கத்தின் உண்மையான முகத்தை (மாணவர்களினுடைய தன்னியல்பான முற்போக்கு அரசியல் பார்வையை அவதூறு செய்து மட்டுப்படுத்துவது) அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

எனவே, தொடர்பில்லா சில நிகழ்வுகளை காரணமாக காட்டி,  பல்கலைக்கழக வளாக ஜனநாய கத்தை சீர்குலைத்து, மாணவர்களை அச்சுறுத்தும் போக்கை இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது!

- இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநில செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர்
விடுத்துள்ள அறிக்கையில் இருந்து