tamilnadu

img

அந்த 2 எம்எல்ஏக்கள் எடப்பாடி - ஓபிஎஸ் தான்

சென்னை, பிப்.27- சென்னையில் முதல்வர் மு.க.  ஸ்டாலின் பிறந்த  நாள் விழாவில் உதயநிதி ஸ்டா லின் பேசியுள்ளார். “செவ்வாய்க்  கிழமை காலை  முதல் தொலைக்காட்சிகளில் ‘பிரேக்  கிங் நியூஸ்’ ஒடிக்கொண்டேயிருந்தது. ஒன்று மாலைக்குள் 2 பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிமுகவிற்கு வரப்போகிறார்கள் என்று. மற்றொன்று  இரண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பி னர்கள் பாஜகவிற்கு வரப் போகிறார்கள்  என்று. இவர்கள் எதற்குப்போய் சேர  வேண்டும். இரண்டுமே ஒன்றுதானே.  எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்  றால், பாஜகவில் சேரப் போகும் இரண்டு  சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வமாக இருக்கலாம் என்பதுதான்” என்றும் கிண்டலடித்துள்ளார்.