நீதிக்கட்சியின் முதலமைச்சர் பதவியேற்ற நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார். திக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.