tamilnadu

img

கழிவறையில்லா சூளகிரி பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி, ஆக. 5- சூளகிரி தனி வட்டமாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆண்கள் பெண்கள் கட்டணக் கழிப்பறை உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை இல்லை. இதனால் இங்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வறுமை நிலையிலும், இருளர், பழங்குடி, மலைவாழ், தலித் மக்களும் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை இல்லை. எனவே சூளகிரி பேருந்து நிலயத்தில் இலவச கழிப்பறையும்,  மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையும்  உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், முனிசாமி ஆகியோர் வருவாய் வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.