tamilnadu

img

வானிலை முன்னெச்சரிக்கைக்கு ‘டிஎன் அலெர்ட்’ புதிய செயலி முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தகவல்

சென்னை, செப். 30 -  வடகிழக்கு பருவமழை தொடர் பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் திங்களன்று (செப்.30) நடைபெற்றது. 

இதில், துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு  அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முத லமைச்சர் பேசியது வருமாறு: முன் னெச்சரிக்கை என்பது இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையை நாம் தொட ர்ந்து எடுத்து வருகிறோம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வட கிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டில் அதிகம் மழை பொழி கிறது. வடகிழக்கு பருவமழை முன் பெல்லாம் வருடம் முழுவதும் பரவ லாக பெய்து வந்தது. 

சமீப காலமாக காலநிலை மாற்றத் தால் சில நாட்களிலேயே மொத்தமாக அல்லது ஒரு சில மணி நேரங்களி லேயே ஒட்டுமொத்த பருவமழையும் பெய்து முடிக்கிறது. அதை எதிர்கொள் வது தான் மிக மிக முக்கியமாக உள்ளது. 

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் சென்னை, திரு நெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரண மாக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங் கள் விரைவாக மீண்டு வந்தன. அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் இருந்தனர். 

அதேபோல் இந்த ஆண்டும் பேரிடர் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை தமிழக அரசு மேற் கொண்டு வருகிறது. தலைமைச் செய லாளர் ஏற்கனவே செப்டம்பர் 14 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப் பாளர்கள் காவல் கண்காணிப்பாளர் கள் மாநகராட்சி ஆணையர் உள்ளிட் டோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி னார். அதன் மூலம் அறிவுரைகளையும் வழங்கினார்.

அனைத்தையும் அமைச்சர்கள் அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கை மூலம் பெரிய அளவில் சேதங்களை தடுக்க முடியும். 

வானிலை தரவுகளை உடனடியாக வழங்க கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசர கால சேவை மையம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. 1400 தானியங்கி மழை மானிகளையும் 100 தானியங்கி வானிலை மையங்களை யும் நிறுவி நிகழ்நிற தகவல்களை பெற்று வருகிறோம்.

வானிலை முன்னெச்சரிக்கை தற்போதைய வானிலை பெறப்பட்ட மழை அளவு நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தமிழில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ‘TN ALERT’  என்று மொபைல் ஃபோன் செயலியை உருவாக்கியுள்ளது.

வெள்ளத் தடுப்பு பணிகள் மட்டும் இன்றி ஆண்டுதோறும் மேற் கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறு பாலங்கள் கழிவுகள் அகற்றுதல், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல், அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிப்படுத்துதல் உள்ளிட்டவற்றையும் சரியாக நடைபெறுகிறதா என்றும் ஆய்வின்போது கண்டறிய வேண்டும்.

அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓர் அணியாக நின்று செயல்பட்டால் அதில் வெற்றி பெறு வது 100 சதவிகிதம் சாத்தியம். பருவ மழையால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொது மக்களின் துயர்  துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.”  இவ்வாறு முதல்வர் கூறினார்.