அகில இந்திய மாநாடு: தீக்கதிர் சிறப்பு சந்தா வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு கூட்டம் வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் நடைபெற்றது. இதில் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, 41 நாட்களுக்கு 100 பத்திரிகைகைக்கான சிறப்பு சந்தா தொகையை திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ப. செல்வன், தீக்கதிர் பொறுப்பாளர் எம். பிரகலநாதன் ஆகியோர், தீக்கதிர் பொது மேலாளர் என். பாண்டியிடம் வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், கே. வாசுகி, இரா. பாரி, பெரணமல்லூர் சேகரன், ஏ.லட்சுமணன், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.