திருப்பெரும்புதூர், ஆக.19- தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலையிழந்த சோவல், டாங்சன் தொழி லாளர்கள் ஹூண்டாய் கார் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பொரு ம்புதூர் அடுத்த மண்ணூர் கிராமத்தில் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு உதிரிப் பாகம் தயாரிக்கும் சோவல் இந்தியா தொழிற்சாலை மற்றும் டாங்சன் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலைகள் திடீரென கதவடைப்பு செய்யப்பட்டதால் 400க்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத் தொரு விற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலையிழந்த தொழிலாளர்கள் `ஹூண்டாய் கார் தொழிற்சாலையிலேயே மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என சிஐடியு சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்கிட வலியுறுத்தி, ஹூண்டாய் கார் தொழிற்சாலை முன்பு திங்களன்று (ஆக.19) உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.