தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலைஞர்கள் கலை இலக்கியா, பாவளர் முகில் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுச்சேரி மதகடிப்பட்டு கடைத் தெருவில் பிரதேசச் செயலாளர் உமாஅமர்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்புக் குழுவின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சப்தர்ஹஸ்மி கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி, பாடகர் செல்வம், தவில் கலைஞர்கள் விநாயகம், அமர்நாத், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சங்கர், உலகநாதன், முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த கலைஞர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.