தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு.
மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு
ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான பேருந்து பயண கட்டண சலுகைக்கு ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு
சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி நிதி ஒதுக்கீடு
சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.738 கோடி நிதி ஒதுக்கீடு
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் தொல்பொருள்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்
சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்
அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும்
ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்
தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி நிதி ஒதுக்கீடு
காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி நிதி ஒதுக்கீடு.
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்நாடு அரசு ரூ.20,000 கோடி இழப்பீட்டை சந்திக்கும்!
கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி நிதி ஒதுக்கீடு.
வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படும்.
ரூ.20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.849 கோடி நிதி ஒதுக்கீடு.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு,
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்
தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு