சென்னை, மே 16-தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது.நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.