tamilnadu

img

ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து....

சென்னை:
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், துணை அதிபராகத் தேர்வான கமலா ஹாரிஸ் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராகத் தேர்வான ஜோ பைடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் துணை அதிபராகும் முதல் பெண் என்கிற பெருமையைக் கமலா ஹாரிஸ் பெற்றது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வெற்றியால் தமிழகமே பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் முகநூலில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேர்தலில் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண்ணைத் துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.