tamilnadu

img

அரசியலில் ஆன்மீகம் எடுபடாது: கே.எஸ்.அழகிரி....

சென்னை:
தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும். ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது:திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது. தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும்; ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.