tamilnadu

வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்

சென்னை, ஜன. 11 - மாநில அரசின் மோட்டார் வாகன  வரி உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில பொது  செயலாளர் வி.குப்புசாமி விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:

கடந்தாண்டு நவ.7 ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர்த்திய வரி  விதிப்புகள் திரும்ப பெற வலியுறுத்தி  மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த  முடிவு என்று கோவையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் சட்டம் 106(2) பிரிவை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத கட்டணங்கள் விதிப்பது, ஓட்டுநர்கள், சிறு முத லாளிகள் மீது தொடுக்கப்படும் பெரும் தாக்குதலாகும்.

தொழில் நசிந்து உள்ள நிலை யில் அநியாய அபராத கட்டணங் களை குறைத்து, முறைப்படுத்த வேண்டும். நலவாரிய குளறுபடி களை சரி செய்து பணப்பலன்கள் துரிதமாக வழங்க வேண்டும், அமைப்புசாரா ஓட்டுநர் நல  வாரியத்தில் பதிவு செய்த தொழி லாளர்களுக்கு பொங்கல் பண்டிகை  ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.