tamilnadu

img

அம்பேத்கருக்கு மரியாதை...

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செயலாளர் ராமசாமி, சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி இந்திய மாணவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல் தலைமையில் சிதம்பரம் நந்தனார் விடுதியிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.