tamilnadu

திருவண்ணாமலை மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை: அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை,நவ.17- அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சக்தி விலாஸ் மண்டபம் உள்ளது. இதில் பல்வேறு சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது சக்தி விலாஸ் மண்டபத்தில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அதே இடத்தில் காவல்துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதனால் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனிந்தர்ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கட்டுப்பாட்டு அறை அமைப்பதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. 

கரும்பு பாக்கி தொகையை உடனே வழங்குக: விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை,நவ.17- திருவண்ணாமலை மாவட்டம் தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு, 15 நாட்களுக்குள் பாக்கி பணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போளூர் வட்டக்குழு சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கி.பாலமுருன் தலைமை தாங்கினார். வெ.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் அ.உதயகுமார் வேலை அறிக்கையினை வாசித்தார் நிர்வாகிகள் ந.ருத்திரவேலு, கே. வெங்கடேசன், ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் காமாட்சி சுந்தரம், செயலாளர் அ.உதயகுமார், பொருளாளர் மதிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தவிச மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார்.

கமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

இராமநாதபுரம், நவ.17- கமுதி பேரூராட்சி முத்துமாரியம்மன் நகர், அரசு மருத்துவ மனை பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நிர்நதர சாக்கடைக் கால்வாய் அமைக்க வேண்டும். ஊர்காவலன் தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும். காளியம்மன் கோவில் தெரு வார்டு வரையறை தொடர்பான குளறு படிகளை சரி செய்யக் வேண்டும். வார்டு மாற்றத்தை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூஸை்ட் கட்சியினர் கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். தகவலறிந்து கமுதி பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். முத்துவிஜயன், தாலுகா குழு உறுப்பினர் கணேசன் ஆகியோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதற்கிடையே கமுதி பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து கமுதி 6-ஆவது வார்டு முத்துமாரியம்மன் நகர். மாறுகால், சாலை அமைக்க 90 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்து இயக்குநர் அலு வலகத்திற்கு அனுப்பப்பட்டு நிதிஒதுக்கீடு வந்ததும் பணி மேற்கொள்ளப்படும். பொது சுகாதாரப் பணியாக பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். செட்டியூரணி கரையில் நடைமேடை அமைக்கவும், செட்டியார் பஜார் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். இருப்பி னும் போராட்டக்களத்தில் உள்ள மக்களிடம் பேசி முடிவை தெரிவிப்பதாக மாவட்டக் குழஉறுப்பினர் ஆர்.முத்துவிஜ யன் தெரிவித்தார்.

;