tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

நலத்திட்ட  உதவிகள் வழங்கல் திருப்போரூர்,

பிப்,24- தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (பிப்.24)  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானா ம்பதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வர் மருந்த கம் திறப்பு விழா செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தண்ணீர் தொழில்நுட்ப கண்காட்சி 

வர்த்தகர்களுக்கான தெற்கு ஆசியா வின்  முன்னணி நிகழ்வான வாட்டர்டுடேஸ் வாட்டர் எக்ஸ்போ தனது 18வது பதிப்பை 2025 பிப்ரவரி26 முதல் 28 வரை சென்னை வர்த்தகமையம், நந்தம்பாக்கத்தில் நடத்த இருக்கிறது.  இந்த கண்காட்சி முன்னணிதொழில் நிபு ணர்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும்புதுமையான தீர்வுகளை ஒரே மேடை யில் ஒன்றிணைக்கும்முக்கிய நிகழ்வாக இருக்கும். நீர் மேலாண்மை  நிறுவனங்கள் மற்றும் நீடித்த  முயற்சிகளை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியத் துவம்வாய்ந்த தளமாக அமையும். இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 200 நிறுவனங் கள்  கலந்துகொண்டு, நீர் மேலாண்மை, கழிவு நீர் மறுசுழற்சி, உப்பு நீர் நீக்குதல், வடி கட்டி அமைப்புகள், தூய்மை தீர்வுகளை காட்சிப்படுத்த உள்ளனர்.