சென்னை, டிச. 15 - 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.28 ஆம் தேதி கோட்டையை முற்று கையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர் கூட்டத்திற்கு பிறகு இதனை செய்தியாளர்களிடம் மு.அன்பரசு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில். அரசுத் துறை களில் 30 விழுக்காட்டுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலவரையறையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம் என்றார்,.
அதிமுக ஆட்சியில் கொரோனாவிற்காக முடக்கப்பட்ட சரண் விடுப்பு, தற்போது நிரந்தரமாக முடக்கி ஆணையிட்டுள்ளது. 7 மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கி விட்டனர்.
எனவே, டிச.28 அன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து தொடங்கும். இதில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள். அதற்கு முன்பாக முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.