சென்னை:
அஞ்சல் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் கணக்கு அலுவலகத்தை பன்முகப்படுத்தக் கூடாது, கேடர் மறு சீரமைப்பை அமல்படுத்த வேண்டும், ஏ.ஏ.ஓ. தேர்வு முறைகேடுகளை சரிப்படுத்த வேண்டும், விதி 38-ன்படி பணியிட மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தபால் அக்கவுண்ட்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் 2 நாள் (அக். 6,7) உண்ணாநிலைப் போராட் டம் நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தபால் கணக்குஅலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆர்.பி.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சங்கர், நாகநாத், அயுப் கான், ஸ்டாலின், சிவகாமி சுந்தரி, சுஜாதா, கிரிஜா வெங்கடேசன், புவனேஸ் வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.