சென்னை:
மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாநிலத் தலைவர் ராகவேந்திரன், பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன் விடுத் திருக்கும் அறிக்கையில், “நவம்பர்மாதம் 26 அன்று இந்தியத்தொழிலாளி வர்க்கம் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்சுயேச்சையான சம்மேளனங்கள், சங்கங்கள் அறைகூவலில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவது மிக அவசியம். இதைக் கணக்கில் கொண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி முழுவேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலை தமிழ் மாநில மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நம் ஆதரவைத் தெரியப்படுத்துகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கஇயக்கங்களுடன் ஓய்வுபெற்றோர் அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.