tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

கொளுத்தும் வெயில்: ஸ்மார்ட்போனை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மக்களை வாட்டி வதைக் கும் கோடை வெயில், இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கிறது. அதிக வெப்பம் காரண மாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களும் ஓவர்ஹீட் (Overheat) ஆக வாய்ப்புள்ளது. இந்த சூழலில், ஓவர்ஹீட் பிரச்சனையிலிருந்து ஸ்மார்ட்போன்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப் போம்.

* ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் (Pocket) வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வெயில் தாக்கம் மற்றும் உடலின் சூடு ஆகியவை ஒன்றிணைந்து ஸ்மார்ட் போன்களை மேலும் சூடாக்குகிறது. எனவே, ஸ்மார்ட்போனை பையில் வைத்து எடுத்துச் செல்வது சிறந்த தாகும்.

*   நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது ஓவர்ஹீட் பிரச்சனை ஏற்படுகின்றது. அத னால், போன்களை தொடர்ந்து பயன் படுத்தாமல் அவற்றுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

* ஸ்மார்ட்போன்கள் பொதுவாக 0 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் செயல்படும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன. எனவே, நேரடி வெயி லிலோ அல்லது வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திலோ போன் களை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைப்பதால், ஸ்மார்ட்போன் கள் மேலும் சூடாகக்கூடும். 

*  ஸ்மார்ட்போனை சார்ஜ் (Charge) செய்யும்போது அதன் மீது பொருளை வைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே சார்ஜ் செய்யும்போது சிறிது அளவு வெப் பம் வெளியாகும். அந்த நேரத்தில் போன் மீது தலையணை அல்லது போர்வையை வைத்தால் போன் மேலும் சூடாகும்.

*  ஸ்மார்ட்போனை சார்ஜ் (Charge) செய்யும்போது அதன் மீது பொருளை வைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே சார்ஜ் செய்யும்போது சிறிது அளவு வெப் பம் வெளியாகும். அந்த நேரத்தில் போன் மீது தலையணை அல்லது போர்வையை வைத்தால் போன் மேலும் சூடாகும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய வசதி!

ஆண்ட்ராய்டு சாத னங்களுக்கான கூகுள் ப்ளே ஸ்டோரில், முன்ன தாக ஒரு நேரத்தில் ஒரு செய லியை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும், அடுத்த பதிவி றக்கத்திற்கான கோரிக்கைகள் வரிசையில் வைக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்தது. தற்போது, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத் தில் 2 செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதியை பயனர்க ளுக்கு கூகுள் வழங்கியுள்ளது. 

ஆனால், ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் 2 செயலிகளுக்கு மேல் பதிவிறக்கம் செய்ய இயலாது. 3ஆவது செயலி பதிவிறக்கம் தானாக வரிசையில் வைக்கப்பட்டுவிடும். செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. செயலிகளுக்கான அப்டேட் ஒன்றன்பின் ஒன்றாகவே பதிவிறக்கம் செய்யப்படும்.