நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம்
திருநெல்வேலி, மார்ச் 23- நெல்லை அதி முக வேட்பாளர் சிம்லா முத்துச் சோழன் திடீர் மாற் றம் செய்யப்பட்டு ஜான்சி ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜான்சி ராணி, அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக இணைச் செயலாளராகவும் திசையன் விளை பேரூராட்சித் தலைவராகவும் உள்ளார். சிம்லா முத்துசோழன் திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர். அண்மை யில் அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு சீட் வழங்கப்பட்டிருந்தது.
5 சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு!
தமிழகத்தில் திரு வண்ணாமலை மாவட்டம் இனாம் கரியாந்தல், விழுப் புரம் மாவட்டம் தென்னமாதேவி, அரியலூர் மாவட் டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச் சாவடி கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், மாதாந்திர சுங்கச் சாவடி கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
கோவையில் என்ஐஏ திடீர் விசாரணை
கடந்த 2022 அக் டோபர் 23 அன்று கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதில், ஜமேஷா முபின் என்பவர் உயி ரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 14 பேர்களைக் கைது செய் துள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA), முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை, சனிக்கிழமையன்று கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளது.