மோடியின் தியான நாடகம் நாட்டிற்கே அவமானம்!
சென்னை, மே 29- பிரதமர் மோடியின் தமிழக வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
அதில், “இறுதிக் கட்ட தேர்தல் நடை பெற இருக்கும் 57 மக்களவைத் தொகுதி களில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கு செல்வார் என்ப தற்கு இந்த ‘தியான நாடகம்” ஒரு உதா ரணமாகும். மேலும் இது, தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே அவமான மாகும்” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நரேந்திர மோடி தன்னந் தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்க ளும் இங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக் கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.4 கோடி
நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு மீண்டும் சம்மன்
சென்னை, மே 29- தாம்பரத்தில், ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகா ரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரன் உட்பட நான்கு பேர் மே 31 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவையில் வசிக்கும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் அவரது வீட்டில் வைத்து கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி னர். இந்த நிலையில் நயினார் நாகேந்தி ரன், தமிழக பாஜக அமைப்புச் செயலா ளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயி னார் நாகேந்திரனின் உதவியாளர் மணி கண்டன் ஆகிய நான்கு பேரும் மே 31 அன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக சிபி சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஏற்கனவே பணத் துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோ தரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்தி ரனின் உறவினர் முருகன் உள்ளிட்டோ ரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளார்
துரை வைகோ அறிக்கை
சென்னை, மே 29- சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து, தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்
“வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் நலமு டன் இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தார்கள். எலும்புகள் உடைந்திருந் தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கி றார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற் படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வை யாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தொண்டர்கள், நலம் விரும்பி கள் வைகோவை சந்திக்க வருவதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
சிறைவாசிகள் கேன்டீன் மூடப்படவில்லை!
புழல் சிறை நிர்வாகம் தகவல்
சென்னை, மே 29- சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி யான எஸ். பக்ருதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தார். அதில் ‘புழல் மத்திய சிறையில் கைதி களுக்கு செயல்பட்டு வந்த கேன்டீன் திடீ ரென கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட் டுள்ளன. இதனால் கைதிகள் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு சிரமமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற னர். எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.சத்ய நாராயண பிரசாத், வி. லட்சுமி நாராய ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறி ஞர் எஸ். நதியா ஆஜரானார்.
அப்போது, சிறைத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறி ஞர் இ. ராஜ் திலக், அந்தக் கேன்டீன் மூடப் படவில்லை; இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வ தாகவும் தெரிவித்தார். இதையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு நீதி பதிகள் தள்ளிவைத்தனர்.