tamilnadu

img

அமைச்சர் சேகர்பாபு வாக்கு சேகரிப்பு

வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொளத்தூர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மேயர் ஆர்.பிரியா, திமுக பகுதிச் செயலாளர்கள் ஏ.நாகராஜன், வ.முரளிதரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக பகுதிச் செயலாளர் ஞானம், விசிக மாவட்டச் செயலாளர் அப்புன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.