tamilnadu

img

தென்மாவட்டங்களில் 1,480 மருத்துவ முகாம்கள்

சென்னை,டிச.21- மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 1480 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக பத்திரி கையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரி சோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த மருத்துவ  முகாமில் கண், பல், ரத்தம், இ.சி.ஜி  போன்ற பரிசோதனைகளுடன் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதனை தொடங்கி வைத்த  அமைச்சர்கள், பத்திரிகையாளர் களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரி சோதனைகளை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“முதலமைச்சர் அறிவுறுத்தல் படி, பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. அப்போலோ மருத்துவமனை நிர் வாகத்துடன் இணைந்து இந்த மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட் டுள்ளது.

மிக்ஜம் புயலின் போது தங்கள்  உயிரையும் துச்சமென மதித்து செய்தியாளர்களும், புகைப்படக்காரர் களும் களத்தில் முன் நின்றனர். அவர்க ளுக்கு உதவும் விதமாக இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களின் உடல்நிலை பேணி பாதுகாப்பது அரசின் கடமை யாகும்.

மேலும், தென் மாவட்டங்களில் பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 1480 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்த எண் ணிக்கை அதிகரிக்கப்படும்.

196 நடமாடும் மருத்துவ வாகனங் கள் மூலம் மருத்துவப் பணிகள் நடை பெற்று வருகிறது. ஒவ்வொரு வாக னத்திற்கு ஒரு மருத்துவர், ஒரு செவி லியர் மற்றும் மருத்துவ உதவியாளர் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.