tamilnadu

சீரமைக்க வேண்டிய நீர்நிலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

சென்னை, ஜூலை 8-  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டப் பகுதி களில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு சென்னையில் 210 குளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி இந்த குளங்களை சீரமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இவற்றில் 53 குளங்களை சீரமைக்கும் பணி விரைவாக நடை பெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் முடிந்தால் பெருமளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரி வித்தார். மேலும் குளங்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி அளிக்கக் கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு ள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர மைக்க வேண்டிய நீர்நிலை கள் இருந்தால் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க லாம், என்று அறிவிக்கப்பட்டு ள்ளது.  இது தொடர்பாக மாநக ராட்சி மழைநீர் வடிகால் துறையின் தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறியதாவது:- சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட பகுதிகளில் 210 குளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது பகுதியில் சில குளங்கள் இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இவ்வாறு  சீரமைக்கப்பட வேண்டிய 30 குளங்கள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த ஆவணங்களை எல்லாம் பரிசீலனை செய்து வருகிறோம். இந்த ஆவண ங்கள் சரியாக இருந்து அவைகள் குளம் என்பது உறுதி செய்யப்பட்டால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். மழைநீர் வடிகால் துறையை 044 - 2561 9315 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், chiefengineer.swd.roads@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.  இவ்வாறு அவர் கூறி னார்.