tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

சென்னை,டிச.1- உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக  மாநில தேர்தல்  ஆணையர் பழனிசாமி தெரி வித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக அறிவிக்கப்படும்.  டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் தேதி  அறிவிக்கப்படும் என உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருந்தோம். அதன்படி  டிசம்பர் முதல் வாரம்  முடிவதற்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படும். உள்ளாட்சி தேர்தலு க்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்தால் நாளை கூட (திங்கள்) அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவித்தார்.  டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.