புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

img

யுகமாகி நின்ற லெனின்

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்

உறவாகி நின்ற லெனினே!

அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்

அரசாள வந்த லெனினே!

சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்

சுதந்திர மான லெனினே!

இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்

இறையாகி வந்த லெனினே!

நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவழி

நடை கொண்டு வந்த லெனினே!

உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி

உரமாக்கி வைத்த லெனினே! 

- பாவேந்தர் பாரதிதாசன் (1918)


(இன்று மாமேதை லெனின் பிறந்த நாள்)

;