ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பலமான தடைகளை எதிர்கொண்டாலும், மக்களின் உரிமைகளுக்காக போராடும் உங்களின் மனப்பான்மையை அசைக்க முடியாது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளார்கள். அதே வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து வழி நடத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.