tamilnadu

img

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா

சென்னை:
கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று அடிக்கல் நாட்டுகிறார்.இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கள்) காலை 10 மணிக்குகாணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.12.25 கோடியில் உலகத்தரமிக்கஅருங்காட்சியகம் கீழடியில் அமைக்கப்படுகிறது. தொல்லியல் ஆய்வு மூலம் தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

;