தருமபுரி, டிச. 9- நில அளவைபணியாளர்களின் 9 ஆம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பின் சார்பில் தரும புரி மாவட்டம் முழுவதும் வட்டாட்சி யர்கள் அலுவலகம் முன்பு திங்க ளன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களப் பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற் கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண் டும். உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டலத் துணை இயக்குநர் இணை இயக்குநர் (நிர் வாகம்), இளக்குநர் ஆகியோர்க ளுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழி யர்கள் மீது பெரும் பணிச் சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமை யாக நடத்துவதையும் கைவிட வேண்டும். நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு கோட்டச் செயலா ளர் சின்னராசு தலைமைவகித்தார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் பிரபு, பொரு ளாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, அரூரில், பாப்பி ரெட்பட்டி, பாலக்கோடு, பென்னாக ரம், நல்லம்பள்ளி, காரிமங்கல உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவல கங்களின் முன்பு இந்த போராட் டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் நில அளவைத் துறையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர், சார் ஆய்வா ளர், குருவட்ட நில அளவையர், நில அளவையர் என மொத்தம் 100 பேர் பணிபுரிகின்றனர். இதில் 97 பேர் காத்திருப்பு போராட்டத்தில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கது.
சேலம் இதேபோன்று, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் சேலம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நில அளவையர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி னர். சேலம் வட்டாட்சியர் அலுவல கத்தில் மாவட்ட செயலாளர் செல்ல முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோட்டத் தலைவர் சுந்தரமுருகன், கோட்டச் செயலாளர் தாமரை செல்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நில அளவையர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று, சேலம் மேற்கு வட் டாட்சியர் அலுவலகத்தில் மாவட் டத் தலைவர் கே வி சங்கர் மாவட்ட இணைச் செயலாளர் சி தமிழரசன் மாவட்டப் பொருளாளர் இளங்கோ வன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். இதேபோன்று, மேட்டூர் பகுதியில் சங்கத்தின் நிர்வாகி முருகேசன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சிங்கராயன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.