சென்னை:
தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு போராட்ட நிதியாக இதுவரை ரூ.7 லட்சத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து தென்மண்டல இன்சூரன்ஸ் ஊரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் த.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலுள்ள அனைத்து எல்ஐசி கிளை அலுவலகங்கள் முன்பும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.விவசாயிகளின் நலனைப் பாதிக்கிற சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டுமென்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோரியுள்ளது. தமிழகக் கோட்டங்கள் சார்பாக ரூ.1லட்சம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.