tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை மசோதாவை எதிர்த்தும்,  ஜெஎன்யூ பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர்அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டத்தலைவர் மணிகண்டன் தலைமையில் மாணவர் சங்கமாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், இசக்கி(வடசென்னை), ஜான்சி, சந்துரு (தென்சென்னை), வாலிபர்சங்க மாநிலத்துணைத்தலைவர் கே.எஸ்.கார்தீஷ்குமார் , வடசென்னை மாவட்டச்செயலாளர் சரவணத்தமிழன், தென்சென்னை மாவட்டத்தலைவர்  சுரேஷ்,  செயலாளர் ஆறுமுகம், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர்  எஸ்.மஞ்சுளா ஆகியோர் பங்கேற்றனர்.