tamilnadu

img

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் தயாரிப்பு

சென்னை,ஜூன். 2-சென்னையில் பல இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ஜோதி லேபரட்ரீஸ் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. அறிவுச்சொந்துரிமை பிரிவினர் அறிவுச்சொத்துரிமை தொடர்பான உரிமைகளை அமல்படுத்தும்பிரிவினரு டன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஜெ.பி. பிளாஸ்டிக், ராம் தேவ் புராடக்ட்ஸ், எஸ்.எம். பிளாஸ்டிக் ஷாப், மற்றும் கிடங்கு ஆகியவற்றில இந்த சோதனை நடைபெற்றது. போலியாக தயாரிக்கப்பட்ட ஸ்டீல் ஸ்கரப்பர், எக்சோ ஸ்டீல் ஸ்கரப்பர், எக்சோ நைலான் ஸ்கரப்பர்,எச்சோ டீ சர்ட், இஎக்ஸயுஷைன் ஸ்டீல் ஸ்கரப்பர்,எக்சோ டேப் ரோல்  உள்ளிட்ட போலி தயாரிப்புகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பொருட்களை விற்பனை செய்து வந்த கே.ஜம்தாராம் (26), கோபாராம் கபூர்ஜி (31) பராஸ் மலாஜி (34) ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 420,486, 1860 மற்றும் 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் 51(பி) 63 ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.