tamilnadu

img

உத்திரமேரூர் பழங்கால கோயிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு....

காஞ்சிபுரம்:
500 ஆண்டு கால பழமையான உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணி மேற்கொள்ளும்பொழுது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கோயில் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் முடிவுசெய்தனர்.

இதனையடுத்து, கோயில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளைத் திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன்கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன.வருவாய்த் துறையின் அனுமதி இல்லாமல் 500 ஆண்டுகால பழமையான கோயிலைமுழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அப்பொழுது கோயிலின் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும்பொழுது குவியல் குவியலாகத் தங்கம் கிடைத்ததாக வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்றதங்கத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல்செய்வதற்காக கோயில் அமைந் துள்ள பகுதிக்குச் செல்லும்பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய்த் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.500 ஆண்டுகால பழமையான கோயிலை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் எந்தஒரு அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக அப்பகுதியைச் சார்ந்த நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி புதிதாக ஒரு கோயில் கட்டுவதற்கு தீர்மானித்து, இப்பணியை மேற்கொள்ளும்பொழுது கோயில் நுழைவாயில் உள்ள படிக்கட்டின்கீழ் தோராயமாக 100 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன.இந்நிலையில் புதையலாக கிடைத்தபழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்நியர்கள் படையெடுப்பு காரணமாக அக்காலத் தில் வாழ்ந்த முன்னோர்கள் போர் பதற்றத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே சுவாமிசிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காகஉருவாக்கப்பட்ட நகைகளை இந்தக் கோயிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்துவைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் அனைத்தும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாகச் சாத்தப்படும் நகைகள் என கூறப்படுகிறது. மேலும், அம்பாள்சிலையை காணவில். பல அரிய தெய்வ சிலைகள் எல்லாம் தற்போது காணவில்லை என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது பொதுமக்களால் கையகப் படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீட்டு குறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

;