tamilnadu

ஐடிசி நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது

சென்னை, அக் 2 சிகரெட் உற்பத்தியில் பெருநிறுவனமான ஐடிசிக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக வேப்பர்கள் மற்றும் சிகரெட் குறைப்பு ஆலோசகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் வேப்பர் மற்றும் இ சிகரெட் பிடிக்கிறார்கள். பின்னர் படிப்படியாக புகைபழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். கடந்த ஐந்தாணடுகளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்படி புகைபழக்கத்தில் இருந்த விடுபட்டுள்ளனர். இதனால் சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசிக்கு  இழப்பு ஏற்படுவதாக கூறி இ.சிகரெட் மற்றம் வேப்பர்கள் பயன்படுத்த மத்திய அரசு அவசரச்சட்டத்தை சமீபத்தில் பிறப்பித்தது. அரசின் இந்த முடிவுக்கு மருத்துவ நிபுணர்கள், சட்டத்துறையை சேர்ந்த நிபுணர்கள் ஒன்று சேர்ந்து  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்  இ சிகரெட் பயன்படுத்துவோரை பிரதிநிதித்துத்து வப்படுத்தும்  இந்திய வேப்பர்ஸ் அசோசியேஷன் (ஏவிஐ) புதுடில்லி, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் தேசிய அளவிலான  எதிர்ப்பு இயக்கங்களை நடத்திய தாக ஏவிஐ இயக்குநர் மற்றும் தீமையை குறைப்பதற்கான  ஆலொசகர்  சம்ராட் சவுத்திரி கூறினார்.