tamilnadu

பின்தங்கியவர்களுக்கு  வீட்டுவசதி கடன்

 சென்னை, பிப். 17 பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருமான பிரிவினர் போன்றோருக்கு வீட்டு கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும் அக்மே ஸ்டார்  வீட்டுவசதி நிதி நிறுவனம் சென்னையில் தனது  கிளையை திறந்துள்ளது. இங்கு பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அறி விக்கப்பட்ட நகரங்களில் அத்திட்ட வழிமுறைகளின் படி அமையப்பெற்ற குடியிருப்பு பகுதிகளில் வீடு வாங்க விரும்பு வோருக்கு கடன் வழங்கப்படும். சென்னையில், எண். ஜி 1, 5/90 ஏ, அஞ்சனா காம்ப்ளக்ஸ், பட் ரோடு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை 600016 என்கிற முகவரியில் இந்த நிறுவனம் இயங்கவுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருமான பிரிவினர் போன்றோருக்கு ரூபாய் 25லட்சம்  வரை கடன் வழங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவர் ஆசிஸ் ஜெயின் கூறியுள்ளார்.