tamilnadu

ஓசூர் மற்றும் ஆம்பூர் ,திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

அங்கன்வாடி ஊழியர் சரளா உடலுக்கு சிஐடியு அஞ்சலி

ஓசூர், மார்ச் 7- கிருஷ்ணகிரி சூளகிரி வட்டம் பேரிகை அருகில்  சீக்கனப்  பள்ளி மஞ்சுநாத் குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் தர்மஸ்த லம் கோயிலுக்கு சென்றுவிட்டு, திரும்பி வரும்போது தும்கூர்  அருகில் குனிக்கல் என்ற இடத்தில் அதிகாலை 2 மணிக்கு விபத்தில் சிக்கினர். எதிரே வந்த கார் டயர் வெடித்து சாலை  நடுவில் உள்ள தடுப்பில் மோதி மறுபக்கம் வந்த காரிர் மீது  மோதியது. இதில் சீக்கனப்பள்ளி மஞ்சுநாத் குழந்தை உட்பட குடும்பத்தினர் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். இதில் அங்கன்வாடி ஊழியர் சரளாவும் மரணமடைந்  தார். அவர்களது உடலுக்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், தலை வர் நஞ்சுண்டன், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்  சங்க மாநில துணைத் தலைவர் கோவிந்தம்மா, மாவட்ட நிர்வாகிகள் புவனேஸ்வரி, கஸ்தூரி, பேகம், உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சீக்கனப்பள்ளியில் சுடுகாடு இல்லாததால் விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த நிலத்திலேயே புதைக்கப்பட்டனர்.

ஆம்பூர் அருகே வனபகுதியில் பெண் சடலம்

ஆம்பூர், மார்ச் 7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  விண்ணமங்க லம் கல்குவாரி அருகே உள்ள வனப்பகுதியில் 35 வயது  மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையின ருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை அதிகாரிகள், காவல்  துறையினர், வருவாய் துறையினர் அந்த பெண்ணின் அருகில் இருந்த பை மற்றும் செல்போனை கைப்பற்றி விசா ரணை நடத்தினர். அதில் அவர்  கடந்த 17 நாட்களுக்கு முன்பு  காணமல் போன சின்ன கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து சுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மளிகை கடையில் வருமான வரித்துறை சோதனை

திருவண்ணாமலை, மார்ச் 7- திருவண்ணாமலை, ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் தெருவில் அருணகிரி என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை மளிகைக் கடை உள்ளது.  இந்தக் கடைக்கு வியாழக்கிழமை இரவு சுப்பிரமணி தலை மையிலான வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கடை  உரிமையாளர் அருணகிரிக்குச் சொந்தமான அதே பகுதியில்  உள்ள 3 குடோன்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. மளிகை கடை ஊழியர்கள், குடோன் ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவு முக்கிய  ஆவணங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். 

வெளிநாட்டில் பணம் பெற்றுத் தருவதாக 25 லட்சம் மோசடி

திருவண்ணாமலை, மார்ச் 7- ஆரணியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், மகளிர் குழுக்க ளுக்கான அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். இந்த அறக்  கட்டளையில் ரூ.25 லட்சம் செலுத்தினால் அடுத்த 1 மணி நேரத்தில் வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடி கிடைக்கும் என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி  தரணியிடம் கூறினாராம். இதை நம்பிய தரணி, 2019இல் ரூ.25 லட்சத்தை ஜோதியிடம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜோதி, சொன்னபடி  வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியை பெற்றுத்தரவில்லை யாம். பலமுறை பணத்தை கேட்டும் ஜோதி தரவில்லை.  இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் தரணி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து, ஜோதி, மோசடிக்கு உடந்தையாக இருந்த  ஜோதியின் கணவர் பாபு, வெம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்  ராஜ், ஜோதியின் உறவினர்கள் கண்ணதாசன், சேகர், செல்வ ராஜ், சத்தியபாவா ஆகிய 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் திருவண்ணாமலை குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

வார்டுகள் மறுவரையறை கருத்துக் கேட்பு

கள்ளக்குறிச்சி, மார்ச் 7-  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை சீரமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட  அரங்கில் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவ ரும் மறுவரையறை அலுவலருமான கிரண்குராலா  வர வேற்றார். திமுக, சிபிஎம், சிபிஐ, அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பொது மக்கள் பலர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பெரிய  ஊராட்சிகளாக உள்ள பல்வேறு கிராமங்களை பிரிக்க வேண்டும், 37 கிராமங்களை கொண்ட வெள்ளிமலை ஊராட்சியை பிரிக்கவேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக் கையை அதிகரித்து சீரமைக்க வேண்டும், ஒரு ஒன்றி யத்திற்கு மூன்று மாவட்ட கவுன்சிலர் இடங்களை உருவாக்க  வேண்டும், வாக்காளர் ஓட்டுச்சாவடி மற்றும் வார்டுகள் மறு  வரையறை பட்டியல் சம்பந்தமான ஆவணங்களை அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்க வேண்டும். மணலூர்பேட்டை பேரூராட்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும், வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு பேரூராட்சி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர். இயக்குனர் பழனிசாமி பேசுகையில்,“ தற்போது உள்ள மாவட்ட வார்டுகள், ஒன்றிய வார்டுகள் அப்படியேதான் இருக்கும். எண்ணிக்கையை உயர்த்த தற்போதைக்கு இய லாது. பகுதிகள் மாற்றியமைப்பது, இட ஒதுக்கீடு போன்றவை  உரிய அலுவலர்கள் மூலம் மறு சீராய்வு செய்து சீர மைக்கப்படும்” என்றார். மணலூர்பேட்டை பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் ஆக மாற்ற பரிசீலனை செய்யப்படும் என்றார்.

என்எல்சி சுரங்க மண்ணால் பாதிக்கப்பட்ட  விளைநிலங்களுக்கு நிவாரணம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடலூர், மார்ச் 7- என்எல்சியின் 2ஆவது சுரங்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு குவித்து வைக்  கப்பட்டிருக்கும் மண், மழைக்  காலங்களில் கரைந்து அருகி லுள்ள வயல்களல் பரந்துச்  செல்கின்றன. இதனால்,  அந்த விளை நிலங்களை விவ சாயிகள் விவசாய பணிக்கு  பயன்படுத்த முடியாத நிலை  ஏற் பட்டு வருகிறது. இதனால்  ஊ.அகரம், பொன்னாலகரம்,  கொம்பாடிக்குப்பம், அரச குழி, ஊ.கொளப்பாக்கம், ஊத்தங்கால், ஊ.மங்கலம் ஆகிய கிராமங்கள் பாதிக் கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீடு கேட்டு  போராட்டங்கள் நடத்திய தோடு, ஆட்சியர் உள்ளிட் டோருக்கும் மனு அனுப்பி னர். இதுகுறித்து 3 கட்ட  பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட நிலையில் மீண்டும் வியாழனன்று (மார்ச் 6)  விருத்தாசலம் சார் ஆட்சியர்  அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சார் ஆட்சியர் கே.ஜெ.பிர வின்குமார் தலைமையில் என்எல்சி சுரங்கம் 2 முதன்மை  பொதுமேலாளர், காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விளை நிலங்களில் படிந்துள்ள சுரங்க மண்ணை என்எல்சி  நிர்வாகமே அகற்றிக் கொடுப்  பது, அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிப்பது. 2019ஆம் ஆண்டு வரையில் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவது என்றும் அந்த  தொகையை ஏப்ரல் 15ஆம்  தேதிக்குள் வழங்க நடவ டிக்கை எடுப்பதென முடி வெடுக்கப்பட்டது.