சென்னை,பிப்,28- தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
செவ்வாயன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், புதனன்று (பிப்,28) சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனையானது.
தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமுமின்றிரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.