அம்பத்தூர், செப். 7- அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியிலிருந்து அயப்பா க்கம் வழியாக ஆவடிக்கு செல்லும் சாலையையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் குடியி ருப்பு பகுதிகளில், சாலை யில் தண்ணீர் தேங்காமல் பல ஆண்டாக இக்கால்வாய் வழியாக சென்று வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அயப்பாக்கம் தனக்கில்லா முகாம் பகுதி யில் உள்ள கால்வாயை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மண்கொட்டி மூடப்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் வெளியேறுவதற்கு பதிலாக, குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையில், கால்வாயில் தண்ணீர் செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் பருவமழை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயமும் உள்ளது. தற்போது பெய்யும் மழையில் குப்பைகள் நனைந்து மக்கி தூர்நாற்றம் வீசுகின்றன. கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளன. எனவே உடனடியாக வில்லிவாக்கம் ஒன்றிய அதிகாரிகள் அயப்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை, குப்பைக் கழிவுகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.